2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பரசூட்டால் பறிபோன பிரபலத்தின் உயிர்

Ilango Bharathy   / 2022 செப்டெம்பர் 05 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனடாவின் டொரண்டோ பகுதியை சேர்ந்தவர்  21 வயதான   தன்யா பர்டஷி.

 கல்லூரி மாணவியான இவர் 2017ஆம் ஆண்டு நடந்த 'மிஸ் டீன் கனடா' அழகி போட்டியில் பங்கேற்று இறுதி சுற்று வரை சென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
அத்துடன் டிக்டொக்கில் அவரை 1 லட்சத்திற்கும் அதிகமானோர்  பின் தொடர்கின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஸ்கை டைவிங்கில் மிகவும் ஆர்வம் கொண்டவர் இவர் நேற்று முன்தினம் சுமார் 4000 அடி உயரத்தில் இருந்து ஸ்கை டைவிங் செய்துள்ளார்.
 
இதன்போது  பரசூட்டைத் தாமதமாக அவர் திறந்துள்ளதால் பாரசூட் முழுமையாக திறந்து வேலை செய்வதற்குள் அவர் தரையில் வேகமாக விழுந்துள்ளார்.
 
இதையடுத்து, தன்யாவை மீட்ட மீட்புக்குழுவினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில்  அவரைப் பரிசோதித்த வைத்தியர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது அந்நாட்டில் பெரும் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X