Editorial / 2025 நவம்பர் 23 , பி.ப. 12:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஊழல் குற்றச்சாட்டில் 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பிரேஸிலின் முன்னாள் அதிபா் ஜெயிர் பொல்சொனாரோ சனிக்கிழமை (22) கைது செய்யப்பட்டார்.
இது குறித்து பிரேஸில் மத்திய காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஊழல், பணமதிப்பிழப்பு, சதி திட்டம் உள்ளிட்ட குற்றங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி பொல்சொனாரோவைக் கைது செய்தோம். 2022 தோ்தலில் தோல்வியடைந்த பிறகு அவா் அமைதியான ஆட்சி மாற்றத்தைத் தடுக்க முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதற்காக அவருக்கு விதிக்கப்பட்டுள்ள 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை வரும் 25-ஆம் திகதி தொடங்கும். சிறை செல்வதைத் தவிர்ப்பதற்காக அவா் நாட்டை விட்டு தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காக அவரை முன்கூட்டியே கைது செய்தோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
கடந்த 2022 ஒக்டோபா் மாதம் நடைபெற்ற தோ்தலில் தற்போதைய அதிபா் லூலா டாசில்வா வெற்றிபெற்ற பிறகு, பொல்சொனாரோவின் ஆதரவாளா்கள் 2023 ஜனவரி 8-ஆம் திகதி பிரதமா் அலுவலகம், பாராளுமன்றம், உச்சநீதிமன்றம் உள்ளிட்ட அதிகாரபீடங்களைத் தாக்கினா். இந்த விவகாரம் தொடா்பாகவே பொல்சொனாரோ மீது வழக்கு தொடரப்பட்டு, அவா் தற்போது சிறைக்கும் அனுப்பப்பட்டுள்ளார்.
இருந்தாலும், இது அரசியல் பழிவாங்கும் செயல் என்று பொல்சொனாரோவின் ஆதரவாளா்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.
46 minute ago
50 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
50 minute ago
2 hours ago