2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

பறக்க தயாரான விமானத்தில் தீ விபத்து

Freelancer   / 2025 ஏப்ரல் 22 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

புளோரிடாவில் உள்ள ஆர்லாண்டோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராகிய விமானம் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

புளோரிடாவில் உள்ள ஆர்லாண்டோ விமான நிலையத்தில் இருந்து அட்லாண்டாவிற்கு கிட்டத்தட்ட 300 பேருடன் டெல்டா விமானம் புறப்படத் தயாராக இருந்தது.

அப்போது விமானம் ரன்வேயில் செல்லும்போது திடீரென என்ஜினில் தீ ஏற்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பான சூழல் நிலவியது. இதனையடுத்து பயணிகளை டெல்டா விமானத்தில் இருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

விமானத்திலிருந்து அவசர சறுக்குகளில் பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். காயங்கள் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.

விமான மீட்பு மற்றும் தீயணைப்பு குழு உடனடியாக விரைந்து செயற்பட்டதால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது. 

இந்த நிலையில் தீ விபத்து தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .