2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

பறிப்போகும் ட்ரம்பின் பதவி?

S.Renuka   / 2026 ஏப்ரல் 07 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரான் மீதான போரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் செயல்பாடு மற்றும் அவர் தெரிவித்து வரும் கருத்துகளை அடுத்து, அவரை பதவி நீக்கம் செய்வது குறித்த தீர்மானத்தை, அந்நாட்டு செனட் சபையில் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முடக்கி வைத்துள்ள ஹார்முஸ் ஜலசந்தியை திறக்கும்படி, ஈரானுக்கு அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் பல முறை வலியுறுத்தியுள்ளார்.

இதற்காக கொடுத்த அவகாசத்தை அவர் தொடர்ந்து நீட்டித்து வருகிறார்.

இந்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஈரானுக்கு இறுதியாக செவ்வாய்க்கிழமை (07)  வரை காலக்கெடு விதித்துள்ளார் ட்ரம்ப்.

இதற்கிடையே, ஈரானுக்கு எதிரான வசை சொற்களுடன் கூடிய கடுமையான ஆட்சேபனைக்குரிய ஆபாச வார்த்தைகள் அடங்கிய மிரட்டலையும், தன் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதற்கு, உலக நாடுகள் பலவும் அதிருப்தி தெரிவித்திருந்தன.

இந்நிலையில், அமெரிக்காவின் முக்கிய எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சித் தலைவர்கள் மற்றும் ட்ரம்பின் குடியரசு கட்சியைச் சேர்ந்தவர்களும் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, அமெரிக்க அரசியலமைப்பின் 25ஆவது திருத்தச் சட்டத்தின் நான்காவது பிரிவைப் பயன்படுத்தி, ஜனாதிபதி அவரது பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .