Editorial / 2020 ஜனவரி 14 , பி.ப. 06:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தானில் பலத்த மழை மற்றும் பனியின் காரணமாக 19 பேர் பலியாகி யதாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் நேற்றுமுன்தினம் மாலை தெரிவித்தனர்.
“ஆப்கானிஸ்தானின் மேற்கு மற்றும் தெற்குப் பகுதியில் கடுமையான மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதில் பல வீடுகள் தாழ்ந்துள்ளன. மேலும் பல இடங்களில் கடுமையான பனி நிலவுகிறது.
இதன் காரணமாக நேற்றுமுன்தினம் 19 பேர் பலியாகினர்.
16 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தனர்.
தொடர்ந்து கனமழை பொழியுமென எச்சரிக்கை விடுத்துள்ள தாகவும், இதனால் 13 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
எச்சரிக்கையைத் தொடர்ந்து,மாநில அரசு வெள்ளப் பாதிப்பு குறித்து விவாதிக்க உடனடிக் கூட்டத்துக்கு அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
கடுமையான பனி பொழிவதால் நாட்டின் முக்கியச் சாலைகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .