2025 நவம்பர் 05, புதன்கிழமை

பிலிப்பைன்சை தாக்கிய சூறாவளி; 60க்கு மேற்பட்டோர் பலி

R.Tharaniya   / 2025 நவம்பர் 05 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டை நேற்று கல்மேகி என்ற சூறாவளி தாக்கியது. சூறாவளியால் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக, அந்நாட்டின் சிபு தீவில் உள்ள நகரங்கள் மீது சூறாவளி அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல பகுதிகளில் சாலை, மின்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது. கனமழையும் கொட்டித்தீர்த்து வருவதால் மீட்பு பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிலிப்பைன்சை ஹ்டாக்கிய கல்மேகி சூறாவளியில் சிக்கி 46 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மீட்புப்பணியில் பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X