2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

பழங்குடியின குழுக்கள் இடையே தொடர் மோதல்; 76 பேர் பலி

Freelancer   / 2024 நவம்பர் 28 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானில்,  பழங்குடியின குழுக்கள் இடையே ஏற்பட்ட தொடர் மோதல்களில் 76 பேர் உயிரிழந்துள்ளனர். 

பாகிஸ்தான் - கைபர் பக்துன்குவா மாகாணத்தின் லோயர் குர்ரம் மாவட்டத்தில், பழங்குடியின குழுக்கள் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. ஒரு வாரத்திற்கும் மேலாக நடந்து வரும் இந்த மோதலில் பலர் பலியாகி வருகின்றனர்.

அண்மையில், வாகனம் ஒன்றில் சென்று கொண்டிருந்த 40 பேர் மீது திடீரென மறைந்திருந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மண்டோரி சார்கெல் பகுதியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், 40 பேரும் உயிரிழந்தனர். 

இதனை தொடர்ந்து 2 நாட்கள் கழித்து, இதே மாவட்டத்தின் பகன் கிராம பகுதியில், துப்பாக்கி சூடு மற்றும் தீ வைப்பு உள்ளிட்ட தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் 21 பேர் பலியானார்கள். இதனை தொடர்ந்து, அதிகாரிகள் அந்த பகுதிக்கு சென்று சமரசத்திற்கான போர்நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தினார்கள். எனினும், செவ்வாய்க்கிழமை (25), மீண்டும் மோதல் வெடித்தது.

கோஜாகரி, மதசாநகர் மற்றும் குஞ்ச் அலிஜாய் ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட மோதல்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 6 பேர் காயமடைந்துள்ளனர். 

இதனையடுத்து, இந்த வன்முறையால் மொத்த பலி எண்ணிக்கை 76ஆக உயர்ந்து உள்ளது. இதனால், அந்தப் பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .