Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Ilango Bharathy / 2022 செப்டெம்பர் 15 , பி.ப. 03:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டாரில் பாடசாலை பஸ்ஸொன்றுக்குள் வைத்து தவறுதலாக பூட்டப்பட்ட சிறுமி, உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கட்டாரில் பணிபுரிந்து வரும் கேரளாவைச் சேர்ந்த அபிலாஷ் சாக்கோ சௌமியா தம்பதியினரின் மகளான மின்ஸா மரியம் என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
4 வயதான குறித்த சிறுமி கடந்த 11 ஆம் திகதி காலை பஸ்ஸில் பாடசாலைக்குச் சென்றுள்ளார். செல்லும் வழியில் பஸ்ஸிலேயே ஆழ்ந்து உறங்கியுள்ளார். பாடசாலை வந்ததும் ஏனைய மாணவ மாணவிகள் இறங்கியுள்ள நிலையில் அவர் பஸ்ஸில் உறங்கிக் கொண்டிருப்பதை கவனிக்காத பஸ் சாரதி பஸ்ஸின் கதவுகளை மூடிவிட்டுச் சென்றுள்ளார்.
இந்நிலையில் பாடசாலை நேரம் முடிவடைந்து மீண்டும் குறித்த பஸ் திறக்கப்பட்ட நிலையில் அங்கு அச்சிறுமி மயக்கமடைந்த நிலையில் இருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பாடசாலை ஊழியர்கள் உடனடியாக அவரை வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.
இந்த நிலையில் பஸ் கதவுகளை அடைத்ததால் அதிக வெப்பம் மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டு சிறுமி உயிர் இழந்துள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது அந்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த விவகாரம் தொடர்பான முறையான விசாரணை நடத்தப்படும் என கட்டார் கல்வி அமைச்சகம் கூறியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago