2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

பாகிஸ்தானில் இந்து கோயில் மீது ரொக்கெட் லோஞ்சர் தாக்குதல்

Freelancer   / 2023 ஜூலை 17 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானில் அடுத்தடுத்து இரண்டு இந்து கோயில்கள், ஜேசிபி மற்றும் ரொக்கெட் லோஞ்சர்களால் தாக்கி இடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கராச்சியின் சோல்ஜர் பஜார் பகுதியில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. அப்போது, அப்பகுதியில் இருந்த 150 ஆண்டுகால பழமையான மாரிமாதா கோயிலை ஒரு கும்பல் ஜேசிபி மூலம் இடித்து தள்ளியது.

கோயில் இடிக்கப்பட்டது கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்த 24 மணி நேரத்திற்குள், காஷ்மோர் பகுதியில் உள்ள மற்றொரு கோயிலை மர்மக் கும்பல் ரொக்கெட் லோஞ்சர்களால் தாக்கி சிதைத்தனர். இந்த சம்பவத்தின் போது, குடியிருப்புகள் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் யாரும் பாதிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 இதற்கிடையே, சிந்து மாகாணத்துக்கு உட்பட்ட காஷ்மோர் மற்றும் கோட்கி மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக அந்நாட்டு மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. பெண்கள், குழந்தைகள் என 30 பேர் பிணைக்கைதிகளாக பிடித்துவைக்கப்பட்டுள்ளதாகவும், சிந்து மாகாண உள்துறை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்றும் மனித உரிமை ஆணையம் பணித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .