2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பாடசாலையில் துப்பாக்கிச் சூடு; சிறுவர்கள் உட்பட 9 பேர் உயிரிழப்பு

Ilango Bharathy   / 2022 செப்டெம்பர் 26 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவில் பாடசாலையொன்றில் ஆயுததாரியொருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சிறுவர்கள் உட்பட  9 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய ரஷ்யாவில் உள்ள உட்முர்டியா (Udmurtia )என்ற பகுதியிலே இன்றைய தினம்(26)  இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சுமார் 1000 மாணவர்கள் படிக்கும் குறித்த பாடசாலைக்குள் நுழைந்த மர்ம நபர், அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்திவிட்டு, தன்னைத் தானே சுட்டுக் கொண்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் ,20 க்கும் மேற்பட்டோர் படு காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  இது குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து  வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X