2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

பாடசாலை மாணவன் உயிரிழப்பு ; TikTok தடை

Janu   / 2024 டிசெம்பர் 22 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

அல்பேனியா அரசாங்கம் டிக் டாக் (TikTok) செயலியை ஒரு வருடத்திற்கு முடக்க முடிவு செய்துள்ளதாகவும் இந்த தடை, வரும் ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அல்பேனியாவில் கடந்த மாதம், 14 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தின் காரணமாகவும் மேலும், இதனால் சிறுவர்களுக்கு ஏற்பட்டுள்ள தாக்கம் காரணமாகவும் இந்த டிக் டொக் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும், முன்மொழியப்பட்ட டிக் டாக் தடை குறித்து அல்பேனிய அரசாங்கத்திடம் இருந்து அவசர விளக்கத்தை எதிர்பார்ப்பதாகவும் குறித்த பாடசாலை மாணவன் அல்லது தாக்குதலை ஏற்படுத்திய நபர் டிக் டாக் கணக்குகளை வைத்திருந்ததற்காக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை எனவும்  டிக் டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .