Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2022 நவம்பர் 05 , பி.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூன்றாவது முறையாக நாட்டின் சக்தி வாய்ந்த தலைவராக ஷீ ஜின்பிங் பதவியேற்ற பின்னர்,
சீனப் பங்குகளின் சாதனை விற்பனையானது நாட்டின் மிகப்பெரிய நிறுவனங்களின் மீதான முதலீட்டாளர்களின் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளது.
சீனாவின் வீழ்ச்சியடைந்த தொழில்நுட்பத் துறை புத்துயிர் பெறும் மற்றும் சீனாவின் எல்லைகளைத் திறப்பது பொருளாதாரத்தை உயர்த்தும் என்ற அறிகுறிகளுக்கான நம்பிக்கைகள் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய காங்கிரஸால் வெளிப்படையாக சிதைக்கப்பட்டன.
ஒரு தசாப்தத்துக்கு இருமுறை நடந்த இந்த நிகழ்வு, நாட்டின் மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பான பொலிற்பீரோ நிலைக்குழுவில் ஷீ தனது பிடியை இறுக்கிக் கொள்வதில் உச்சக்கட்டத்தை எட்டியது.
ஹொங்கொங் மற்றும் நியூயோர்க்கில் பட்டியலிடப்பட்ட சீன தொழில்நுட்ப நிறுவனங்கள் காங்கிரஸ் முடிந்த முதல் வர்த்தக நாளில் அதிக விற்பனையால் பாதிக்கப்பட்டன.
அமெரிக்க பரிவர்த்தனைகளில் வர்த்தகம் செய்யப்படும் முக்கிய சீன நிறுவனங்களைக் கண்காணிக்கும் நாஸ்டாக் கோல்டன் டிராகன் சீனா இன்டெக்ஸ், அன்றைய நாளில் 20% வரை சரிந்தது.
ஹொங்கொங்கில், ஹொங் செங் டெக் இன்டெக்ஸ் 9.6%க்கும் அதிகமாக சரிந்ததுடன், ஒட்டுமொத்தமாக, இந்த ஆண்டு குறியீடுகள் 45% மற்றும் 47% க்கும் அதிகமாக குறைந்துள்ளன.
தலைமைத்துவ மாற்றங்கள் நிகழும் கட்சி மாநாடுகள் முடிந்த சிறிது நேரத்தில், சீன பங்குகள் சிறப்பாக செயற்படுவதாகவும் இது, உள்வரும் தலைவர்கள் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிப்பார்கள் என்ற சந்தை எதிர்பார்ப்புகளை பிரதிபலிக்கிறது என்றும் கோல்ட்மேன் சாச்ஸ் குறிப்பிட்டுள்ளது.
தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஆதரவான கொள்கைகள் இல்லாமை மற்றும் ஷியின் உரையில் பொருளாதாரத்துக்கான அரசு தலைமையிலான அணுகுமுறையின் அறிகுறிகள் முதலீட்டாளர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளன என்று அமெரிக்க முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனமான ஸ்டான்ஸ்பெரி ரிசேர்ச்சின் ஆசிய பங்குச் சந்தைகளின் ஆய்வாளர் பிரையன் டைகாங்கோ கூறினார்.
பல்வேறு துறைகளில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றம், சீன செமிகண்டக்டர் துறையின் வளர்ச்சியைத் தடுக்கும் வொஷிங்டனின் முயற்சிகள் மற்றும் அமெரிக்காவில் பட்டியலிடப்பட்ட சீன நிறுவனங்களை தணிக்கை செய்வதில் இரு நாடுகளுக்கு இடையே உள்ள சர்ச்சைகள் தலைச்சுற்றலை வலுப்படுத்துகிறது என்று குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
50 minute ago
53 minute ago
3 hours ago