Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mithuna / 2023 டிசெம்பர் 11 , பி.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் தொடங்கி 2 மாதத்தை கடந்து விட்டது. ஆனாலும் இன்னும் யுத்தம் முடிவுக்கு வராமல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இடையில் 7 நாட்கள் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
ஆனால் மீண்டும் போர் தொடங்கி இருப்பதால் தற்போது இஸ்ரேல் இராணுவத்தினர் காசா முழுவதும் சுற்றி வளைத்து சரமாரியாக தாக்குதல் வருகின்றனர். ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து இந்த அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
தொடர் தாக்குதலால் நிலைகுலைந்துள்ள காசா நகரம் இனி மேம்படுத்த முடியாத அளவில் கடும் பேரழிவை சந்தித்து இருக்கிறது. ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் வரை போர் நீடிக்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் தற்காலிக போர் நிறுத்தத்தின் போது பிணைக்கைதிகளாக பிடித்து வைத்து இருந்த 240 பேரில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என 105 இஸ்ரேலியர்களை ஹமாஸ் விடுவித்தது. இதற்கு ஈடாக இஸ்ரேல் சிறையில் இருந்த பாலஸ்தீன கைதிகளை அந்நாடு விடுதலை செய்தது.
இந் நிலையில் தற்போது இஸ்ரேல் படையினர் மூர்க்கத்தனமாக நடத்தி வரும் தாக்குதலுக்கு ஹமாஸ் அமைப்பினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். பல இடங்களில் இரு படையினரும் நேருக்கு நேர் சண்டையிட்டு வருகின்றனர்.
ஹமாஸிடம் இன்னும் பலர் பிணைக்கைதிகளாக உள்ளனர். அவர்களை மீட்க இஸ்ரேல் படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால் “எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாத வரை எந்த பிணைக்கைதிகளும் உயிருடன் வெளியேற மாட்டார்கள். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் தங்கள் பிணைக்கைதிகளை அவர்கள் உயிருடன் பிடிக்க முடியாது” என ஹமாஸின் ஆயுதப்பிரிவின் செய்தி தொடர்பாளர் அபு ஒபையா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
13 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
19 minute ago