Editorial / 2019 செப்டெம்பர் 26 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

இஸ்ரேலில் இம்மாதம் 17ஆம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து புதிய அரசாங்கமொன்றை அமைப்பதற்காக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை இஸ்ரேலின் ஜனாதிபதி றூவன் றிவ்லின் தெரிவு செய்துள்ளார்.
ஜனாதிபதி றூவன் றிவ்லின், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது பிரதான போட்டியாளரான பென்னி கன்ட்ஸ் ஆகியோருக்கிடையே இடம்பெற்ற இணைந்த சந்திப்பொன்றைத் தொடர்ந்தே நேற்று குறித்த அறிவிப்பு வெளியாகியிருந்தது.
இந்நிலையில், மோசமான மோசடியொன்றை எதிர்கொள்ளும் தலைவரொருவரால் தலைமை தாங்கப்படும் அரசாங்கத்தில் இணைவதை பென்னி கன்ட்ஸ் நிராகரித்துள்ளார்.
வலதுசாரிக் கொள்கைகளுடைய லிகுட் கட்சியின் தலைவரும், இஸ்ரேலின் நீண்ட காலப் பிரதமரான பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அரசாங்கமொன்றை அமைப்பதற்காக 28 நாட்களைக் கொண்டிருப்பதுடன், தேவையேற்பட்டால் இரண்டு வார நீடிப்பொன்றை கோர முடியும்.
அந்தவகையில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அரசாங்கமொன்றை அமைக்கத் தவறினால், இடதுசாரிக் கொள்கைகளுக்கும், வலதுசாரிக் கொள்கைகளுக்கும் இடையேயான கொள்கைகளைக் கொண்ட பென்னி கன்ட்ஸின் நீலம் மற்றும் வெள்ளைக் கட்சிக்கு அரசாங்கமொன்றை அமைப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படலாம்.
3 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
7 hours ago