Freelancer / 2024 டிசெம்பர் 01 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப், அமெரிக்க டொலருக்கு பதிலாக மற்றொரு நாணயத்தை உருவாக்கவோ அல்லது ஆதரிக்கவோ கூடாது என, பிரிக்ஸ் (BRICS) உறுப்பு நாடுகளை கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபடும் நாடுகள் 100 சவீத வரிகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்று, அவர் எச்சரிக்கை விடுத்தார்.
இது குறித்து, அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
“பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் புதிதாக எந்த நாணயத்தையும் உருவாக்கக் கூடாது. மேலும், ஏற்கெனவே இருக்கும் வேறு நாட்டு நாணயத்தையும் பயன்படுத்த கூடாது.
“சர்வதேச வியாபாரங்களுக்கு பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்க டொலரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதை மாற்ற நினைக்கும் நாடுகளுக்கு 100 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்கப்படும்.
“அவர்களுக்கு வேறொரு ஏமாளி கிடைத்தால் அவர்களுடன் வியாபாரம் செய்யட்டும். டொலர் வேண்டாம் என்றால் அமெரிக்காவுடன் உள்ள உறவையும் துண்டித்துக் கொள்ளுங்கள்.
இல்லையெனில், அமெரிக்கப் பொருளாதாரத்தில் விற்பனை செய்வதிலிருந்து விடைபெற்று கொள்ளலாம். பிரிக்ஸ் நாடுகள் டொலரை தவிர்க்க முயற்சிக்கும் போது நாங்கள் வேடிக்கை பார்த்த காலம் முடிந்து விட்டது” ” என்று, டிரம்ப் பதிவிட்டுள்ளார்.
6 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
7 hours ago