2025 நவம்பர் 05, புதன்கிழமை

பிரெக்சிற் நிபந்தனைகளை அங்கிகரித்த ஐரோப்பிய நாடாளுமன்ற உறப்பினர்கள்

Editorial   / 2020 ஜனவரி 30 , பி.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் (பிரெக்சிற்) நிபந்தனைகளை ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் அங்கிகரித்துள்ளனர்.

பெல்ஜியத் தலைநைகர் ப்ரஸெல்ஸில் இடம்பெற்ற உணர்ச்சிமயப்பட்ட விவாதமொன்றைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் ஒப்பந்தத்தை 621-49 என்ற வாக்குகளில் அடிப்படையில் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று  அங்கிகரித்திருந்தனர்.

வாக்களிப்பைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதைக் குறிக்கும் முகமாக, பிரியாவிடைகளைக் குறிப்பதற்காக வழமையாகப் பயன்படுத்தப்படும் ஸ்கொட்லாந்துப் பாடலான ஓல்ட் லங் சைனை ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாடியிருந்தனர்.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஒரு நாள் பிரித்தானியா திரும்பும் எனத் தாம் நம்புவதாக சில பிரித்தானிய ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்திருந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எதிரான கொள்கைகளைக் கொண்ட பிரெக்சிற் கட்சித் தலைவர் நைஜல் பராஜ் உள்ளிட்டவர்கள் தமது இறுதி உரைகளைப் பயன்படுத்தி ஐரோப்பிய ஒன்றியத்தை விமர்சித்திருந்தனர்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இலங்கை நேரப்படி நாளை மறுதினம் அதிகாலை 4.30மணிக்கு பிரித்தானியா வெளியேறவுள்ளது.

இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் ஒப்பந்தத்தை அங்கிகரித்தது ஐரோப்பிய ஒன்றியத்துக்கும், பிரித்தானியாவுக்குமிடையிலான புதிய கூட்டிணைவொன்றின் முதலாவது படியொன்றே என ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் உர்சுலா வொன் டர் லயன் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X