2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

புடவை அணிந்த பெண்களைக் குறிவைத்துத் தாக்குதல்

Ilango Bharathy   / 2022 ஒக்டோபர் 12 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அமெரிக்காவில் இந்தியர்களைக் குறிவைத்து இனவெறி தாக்குதல் நடத்தப்படும் சம்பவம் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த 3 மாதங்களில் மாத்திரம் சுமார் 14 பெண்கள் மீது ஜோன்சன் என்ற 37 வயதான  நபர் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர்  சுமார் 50-73 வயது மதிக்கத்தக்க புடவை அணிந்த பெண்களைக் குறிவைத்தே  இத்தாக்குதலை மேற்கொண்டு வந்துள்ளார் எனவும்,  அவர்களிடமிருந்து 35,000 டொலர்கள் மதிப்பிலான நகைகளையும் பறித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த நபரைக் கைது செய்துள்ள பொலிஸார் இது குறித்த மேதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கர்லிபோர்னியாவில் கைக்குழந்தை உட்பட நான்கு பேர்கொண்ட இந்தியக் குடும்பத்தை மர்ம கும்பலொன்று  கடத்திச் சென்று கொலை செய்த சம்பவம்  உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X