2025 மே 15, வியாழக்கிழமை

புட்டிப்பாலில் மதுவை ஊற்றிக் கொடுத்த தாய்

Freelancer   / 2023 ஓகஸ்ட் 15 , பி.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சென் பெர்னார்டினோ நகரில் வசிக்கும் 37 வயதாகும் ஹானஸ்டி டீ லா டோரி, காரில் சென்று கொண்டிருந்தபோது அவரது குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்துள்ளது. கைவசம் பால், பால் பவுடர் ஏதும் இல்லாத நிலையில், அங்கிருந்த மதுவை புட்டிப்பாலில்  ஊற்றிக் கொடுத்துள்ளார். குழந்தையும் பசி தாங்க முடியாமல் மது நிறைந்த பாட்டிலை குடித்து அழுகையை நிறுத்தியுள்ளது.

இந்நிலையில், வழக்கமாக நடத்தப்பட்ட வாகன சோதனையின்போது தாயாரின் செயல்கள் சந்தேகம் ஏற்படுத்தியதை தொடர்ந்து பொலிஸார் குழந்தையை ஆய்வு செய்தனர். அதில் குழந்தையும் போதையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு தாயிடம் விசாரணை நடத்தினர்.

இதில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டதையடுத்து அவரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.   குழந்தை மருத்துவமனையில் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .