Editorial / 2020 ஜனவரி 23 , பி.ப. 07:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

பூகோள ரீதியான ஒன்றான புதிய கொரனாவைரஸின் பரவலைத் தடுப்பதற்கு உலகளாவிய ரீதியிலுள்ள சுகாதார அதிகாரிகள் தடுமாறுகையில், இதால் 17 பேர் இறந்துள்ளதுடன், ஏறத்தாழ 600 பேர் தொற்றுக்குள்ளாகிய நிலையில் இதன் மய்யமாகக் காணப்படும் 11 மில்லியன் பேரைக் கொண்டுள்ள வுஹான் நகரத்தை சீனா மூடியுள்ளது.
சந்திரப் புத்தாண்டுக்காக நாளை மறுதினம் ஆரம்பமாகும் வாரக்கணக்கான விடுமுறைகளுக்காக மில்லியன் கணக்கான சீனர்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நாளை தொடக்கம் பயணிக்கவுள்ள நிலையில் தொற்றானது வேகமாகும் எனச் சுகாதார அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.
முன்னதாக அறியப்பட்டிருக்காத குறித்த வைரஸானது, வுஹானிலுள்ள விலங்குச் சந்தையொன்றில் சட்டரீதியற்ற முறையில் பரிமாறப்பட்ட காட்டுவிலங்குகளிலிருந்து வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
இந்த வைரஸானது சீனத் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷங்காய், ஹொங் கொங் தவிர வேறு சில நாடுகளான ஐக்கிய அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அடையாளங்காணப்படுள்ள நிலையில் இது ஏற்கனவே உலகளாவிய ரீதியில் பரவுகிறது என அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அனைத்து நகர போக்குவரத்து வலையமைப்புகளையும், வெளியேறும் விமானங்களையும் இலங்கை நேரப்படி இன்று காலை 7.30 மணி முதல் இடைநிறுத்துவதாக வுஹான் நகர அரசாங்கம் தெரிவித்ததாக சீன அரச ஊடகம் கூறியுள்ளது.
இதேவேளை, குறித்த நேரத்துக்குப் பின்னரும் சில உள்ளூர் விமானங்கள் இயங்கியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, வுஹானை விட்டு வெளியேற வேண்டாம் என அரசாங்கம் பிரஜைகளை வலியுறுத்தியுள்ளது.
3 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
7 hours ago