2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

’புர்ஜ் கலிபா’ அவுட்

Mithuna   / 2024 ஜனவரி 07 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபா, டுபாயில் உள்ளது. இந்த கட்டிடத்தின் கட்டுமான பணிகள் 2004ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் தொடங்கி 2010ஆம் ஆண்டு டிசெம்பர் 4ம் திகதி நிறைவடைந்து, பயன்பாட்டிற்கு வந்தது. இதன் உயரம் 828 மீட்டர் (2,716 அடி 6 அங்குலம்)

உலகின் தலைசிறந்த நட்சத்திர ஹோட்டல்கள், சொகுசு விடுதிகளைக் கொண்ட இந்த புர்ஜ் கலிபா கட்டிடத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து மக்கள் வருகின்றனர். அமீரகத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நிச்சயம் செல்லும் இடங்களில் ஒன்றாக இந்த கட்டிடம் உள்ளது.

இந்நிலையில், உலகின் மிக உயரமான கட்டிடம் என்ற அந்தஸ்தை பெற்று, கடந்த 14 ஆண்டுகளாக கின்னஸ் சாதனையில் இடம்பெற்ற புர்ஜ் கலிபா, இன்னும் சில ஆண்டுகளில் தனது சாதனையை இழக்கப்போகிறது.

அதாவது, சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் தற்போது கட்டப்பட்டு வரும் ஒரு கட்டிடம் முழுமையடைந்தவுடன், அது புர்ஜ் கலிபா கட்டிடத்தை விட உயரமானதாக இருக்கும். அந்த கட்டிடத்தின் பெயர் கிங்டம் டவர். ஜெட்டா டவர் என்றும் அழைக்கப்படுகிறது.

கடந்த 2013ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி கட்டுமான பணி தொடங்கியது. இதன் உயரம் 1,000 மீட்டருக்கும் மேல் இருக்கும் (1 கிலோ மீட்டர்) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சொகுசு வீடுகள், அலுவலகம், சொகுசு குடியிருப்புகள் ஆகியவற்றின் கலவையாக இந்த கட்டிடம் இருக்கும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X