Freelancer / 2025 மே 29 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
சட்டவிரோதமாக புறாக்களுக்கு உணவு அளித்ததாக பெண்ணுக்கு 1,200 சிங்கப்பூர் டொலர்கள் அபராதம் விதித்துள்ளது.
சிங்கப்பூர் நாட்டின் தோ பாயோ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சண்முகானந்தம் ஷியாமலா (வயது 70) என்ற பெண், கடந்த 2020மாம் ஆண்டு, தனது வீட்டிற்கு அருகே புறாக்களுக்கு உணவு அளித்துள்ளார்.
சிங்கப்பூரில் பொதுவெளியில் பறவைகள், விலங்களுகளுக்கு உணவு அளிக்க வேண்டுமென்றால் வனவிலங்குகள் மேலாண்மை அதிகாரியிடமிருந்து அனுமதி சான்றிதழ் பெற வேண்டும்.
ஆனால், குறித்த பெண் எந்த வித அனுமதியுமின்றி வீட்டில் புறாக்களுக்கு உணவு அளித்துள்ளார். இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவரை 2020மாம் ஆண்டே நீதிமன்றம் எச்சரித்து அனுப்பியது. ஆனால், அவர் தொடர்ந்து புறாக்களுக்கு உணவு அளித்து வந்துள்ளார்.
இந்நிலையில், இது தொடர்பாக அவர் மீது மீண்டும் புகார் அளிக்கப்பட்டது. புகாரை விசாரித்த சிங்கப்பூர் நீதிமன்றம், சட்டவிரோதமாக புறாக்களுக்கு உணவு அளித்ததாக குறித்த பெண்ணுக்கு 1,200 சிங்கப்பூர் டொலர்கள் அபராதம் விதித்துள்ளது.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago