Editorial / 2020 பெப்ரவரி 24 , பி.ப. 07:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

தென்கொரியாவில் COVID-19-ஆல் பீடிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவில் COVID-19 பரவல் மோசமாகின்ற நிலையில் சீனாவுக்கு வெளியே COVID-19 ஆனது இன்று மேலும் பரவுகிறது.
இந்நிலையில், நேற்றைய முடிவில் சீனாவில் 150 பேர் COVID-19-ஆல் உயிரிழந்த நிலையில் இன்று வரையில் மொத்தமாக 2,592 பேர் COVID-19-ஆல் சீனாவில் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, நேற்றைய முடிவில் சீனாவில் புதிதாக 409 பேர் COVID-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் தற்போது மொத்தமாக 77,150 பேர் COVID-19 தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான், பஹ்ரேய்ன், குவைத் ஆகிய நாடுகள் COVID-19-ஆல் பீடிக்கப்பட்ட தங்களது நாட்டு முதலாவது நபரைக் கொண்டிருப்பதாக இன்று அறிவித்துள்ளன.
இதேவேளை, ஈரானில் COVID-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 12ஆக அதிகரித்துள்ளது. தவிர, ஈரானில் COVID-19 தொற்றுக்குள்ளாகியோரின் எண்ணிக்கையானது 47ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், தென்கொரியாவில் இன்று COVID-19-ஆல் தொற்றுக்குள்ளான புதிய 231 பேர் அடையாளங்காணப்பட்டுள்ள நிலையில் அங்கு மொத்தமாக 833 பேர் COVID-19 தொற்றுக்குள்ளாகியுள்ளனர். தவிர, தென்கொரியாவில் COVID-19-ஆல் இன்று இரண்டு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு COVID-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கை எட்டாக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இத்தாலியில் COVID-19-ஆல் நான்காவது நபர் உயிரிழந்தது இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அங்கு 150க்கும் மேற்பட்டோர் COVID-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
அந்தவகையில், சீனாவுக்கு வெளியே COVID-19-ஆல் 30க்கும் மேற்பட்டோர் தற்போது உயிரிழந்துள்ளதுடன், ஏறத்தாழ 30 நாடுகளில் COVID-19 தொற்று ஏற்பட்டுள்ளது.
3 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
7 hours ago