2025 மே 15, வியாழக்கிழமை

பெஞ்சமின் நெதன்யாகு வைத்தியசாலையில் அனுமதி

Freelancer   / 2023 ஜூலை 16 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடல்நலக்குறைவால் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

73 வயதான பெஞ்சமின் நெதன்யாகு லிகுட் கட்சியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அலுவலகத்தில் இருந்த போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து டெல் அவிவ் நகரில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் பெஞ்சமின் நெதன்யாகு உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என வைத்தியசாலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .