2025 மே 15, வியாழக்கிழமை

பெண் பத்திரிக்கையாளர் மீது மிருகவெறி தாக்குதல்

Editorial   / 2023 ஜூலை 05 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷியாவின் செச்செனியா குடியரசில் பிரபல பெண் பத்திரிகையாளர் ஒருவர் மிருகத்தனமாக தாக்கப்பட்டிருக்கும் செய்தியும், அது சம்பந்தமாக வந்திருக்கும் புகைப்படமும் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

நொவாயா கெசெட்டா (Novaya Gazeta) எனப்படும் செய்தித்தாளின் பிரபல பத்திரிகையாளரான எலெனா மிலாஷினா (Yelena Milashina), அலெக்சாண்டர் நெமோவ் என்ற வழக்கறிஞருடன் உள்ளூர் விமான நிலையத்திலிருந்து செச்சென் தலைநகர் குரோஸ்னி நகருக்கு செவ்வாய்க்கிழமை காலை பயணம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது ஆயுதமேந்திய முகமூடி அணிந்தவர்கள் அவரையும் அவரின் வழக்கறிஞரையும் காரை நிறுத்துமாறு கட்டாயப்படுத்தி பின்னர் மிருகத்தனமாக அவர்களை தாக்கியுள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான பிறகு அருகிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருக்கும் அவர்கள், மேல் சிகிச்சைக்காக மாஸ்கோவிற்கு விமானம் மூலம் அனுப்பப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .