Editorial / 2019 ஜூலை 03 , பி.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேச இடம் கிடைக்காதமையால், தமிழக சட்டப்பேரவையிலிருந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
மேகதாது அணை பற்றி, ராகுல்காந்தி தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றியமை குறித்து விளக்கமளித்து பேச, காங்கிரஸ் உறுப்பினர்கள் அனுமதி கோரியிருந்தனர்.
இதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததையடுத்து, உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததாக, அக்கட்சியின் உறுப்பினர் பிறின்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அக்கட்சியின் உறுப்பினர்கள், ஊடகத்துக்குக் கருத்து தெரிவிக்கையில்,
“தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், முதலமைச்சர் பழனிசாமி உரையாற்றியபோது, கர்நாடக மாநில தேர்தல் பிரசாரத்தில், மேகதாது அணை கட்டப்படும் என்றும் காவிரி மேலாண்மை ஆணையம் விசாரிக்கப்படும் என்று ராகுல் காந்தி கூறியதாக கூறியிருந்தார்.
“அத்தோடு காங்கிரஸின் தேர்தல் அறிக்கையிலும் அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறினார். முதலமைச்சர் இவ்வாறு கூறியதற்கு, அப்போதே நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் அவ்வாறு குறிப்பிடவில்லை என்று கூறினோம்” என்று அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .