2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

பேஸ்புக் பயன்பாட்டுக்கு தடை

Freelancer   / 2025 மார்ச் 27 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பப்புவா நியூ கினியாவில் பேஸ்புக் பயன்படுத்தப்படுவது தடைசெய்யப்பட்டுள்ளது.

சுமார் 20 இலட்சம் மக்கள் தொகை வசிக்கும் இந்த நாடு சுற்றுலா தலங்களுக்கு பெயர் போனது.

இங்குள்ள பொதுமக்கள், பேஸ்புக்கை அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள். சுமார் 13 இலட்சம் பேர் பேஸ்புக்கில் கணக்கு தொடங்கி பயன்படுத்தி வந்துள்ளனர்.

இதற்கிடையே, பேஸ்புக் மூலமாக போலி செய்திகள் மற்றும் ஆபாச படங்கள் அதிகளவில் பரப்பப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனால் பேஸ்புக்குக்கு தடை விதிக்கப்படும் என தகவல் வெளியாகி வந்தது.

இந்நிலையில், பப்புவா நியூ கினிவாவில் பேஸ்புக்குக்கு திடீரென தடை விதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பேஸ்புக்கை பயன்படுத்த முடியாமல் சிரமம் அடைந்தனர்.

இது மக்களின் கருத்து சுதந்திரத்தையும், பேச்சுரிமையையும் பறிப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X