2025 மே 14, புதன்கிழமை

பொலிஸ் வளாகத்தில் பாரிய தீ பரவல்

Freelancer   / 2023 ஒக்டோபர் 02 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

எகிப்திது இஸ்மாலியா மாகாணத்தின் பொலிஸ் வளாகத்தில் இன்று (02) காலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 38 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த தீ விபத்துக்கான காரணம் வெளியாகவில்லை எனவும் இந்த தீ  விபத்தால்  பாதுகாப்பு  பணியகத்தின் தலைமையகத்தின் சில பகுதிகள் இடிந்து விழுந்ததாக சிவில் பாதுகாப்புவட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை காயமடைந்த 26 பேரில், 24 பேர் மூச்சுத் திணறலாலும்,  இருவர் தீக்காயங்களாலும்  பாதிக்கப்பட்டுள்ளனர் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தீ விபத்து குறியீடுகள் அரிதாகவே செயல்படுத்தப்படுவதாலும், அவசரகால நிலைமைகள் போதான செயற்பாடுகள் தாமதமாகவும் இருப்பதால் எகிப்தியில் தீ விபத்துக்கள் அடிக்கடி இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .