2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

போதைப்பொருள் கடத்திய இந்தியர்களுக்கு மரணதண்டனை

Freelancer   / 2025 மார்ச் 23 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிங்கப்பூரில், போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் இந்தியர்கள் மூவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியர்களான ராஜு முத்துக்குமரன் (வயது 38), செல்வதுரை தினகரன் (34), கோவிந்தசாமி விமல்கந்தன் (45) ஆகியோருக்கே, இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த மூவரும்  சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் கடந்த ஜூலை மாதம் சிங்கப்பூரில் இருந்து இந்தோனேசியாவுக்கு படகில் போதைப்பொருள் கடத்த முயன்றனர். கரிமுல் என்ற இடத்துக்கு அருகே சென்றபோது மடக்கிப்பிடித்த பொலிஸார், அவர்களிடம் இருந்து 100 கிலோ போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து 3 பேரையும்  கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதுதொடர்பான வழக்கு விசாரணையில் அவர்கள் மீதான குற்றச்சாட்டு உறுதியானது. இதையடுத்து,  மூவருக்கும் மரண தண்டனை விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X