Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 பெப்ரவரி 18 , மு.ப. 11:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் சுவாச குழாயில் பாக்டீரியா, பூஞ்சை மற்றும் ஒட்டுண்ணிகள் என பல வகையான தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, வாடிகன் செய்தி தொடர்பாளர் மேத்யூ புரூனி தெரிவித்துள்ளார்.
இதுபற்றி வாடிகன் செய்தி தொடர்பாளர் மேத்யூ புரூனி மேலும் கூறுகையில்,
“போப் பிரான்சிஸ் (வயது 88) கடந்த வாரம் உடல்நலம் பாதிக்கப்பட்டு ரோம் நகரில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்படார்.
“வைரசுகள், பாக்டீரியா, பூஞ்சை மற்றும் ஒட்டுண்ணிகள் என பல வகையான தொற்று பாதிப்புகளால் போப் அவதிப்பட்டு வருகிறார். சமீப காலங்களாக அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மற்றும் திங்கட்கிழமை (17) நடந்த பரிசோதனை முடிவில், அவருக்கு சுவாச குழாயில் கலவையான தொற்று ஏற்பட்டு இருக்கிறது என உறுதியாகியுள்ளது.
“அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது என கூறியுள்ளார். இதற்கு முன்பு, கடந்த 2023ஆம் ஆண்டு நிம்மோனியா பாதிப்புக்காக போப் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
எனினும் போப், பத்திரிகை வாசிப்பது உள்பட சில அன்றாட பணிகளை செய்து வருகிறார். அவருடைய நிலைமை சீராக உள்ளது” என்று புரூனி கூறியுள்ளார்.
எனினும், மார்ச் 5ஆம் திகதி சாம்பல் புதன் வரை அவர் எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago