2025 மே 14, புதன்கிழமை

“போர் நிறுத்தம் என்பது ஹமாசிடம் சரணடைவது போன்றது”

Freelancer   / 2023 ஒக்டோபர் 31 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹமாசால் பிடிக்கப்பட்ட பணயக்கைதிகளை "நிபந்தனையின்றி" விடுவிக்க சர்வதேச சமூகம் வலியுறுத்த வேண்டும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்

மேலும் இதுதொடர்பாக தலைநகர் டெல் அவிவில், “நம்பிக்கை மற்றும் வாக்குறுதியின் எதிர்காலத்திற்காக நாம் போராட விரும்புகிறோமா அல்லது கொடுங்கோன்மை மற்றும் பயங்கரவாதத்திற்கு சரணடைவோமா என்பதை தீர்மானிக்க வேண்டிய நேரம் இது.
 

பேர்ல் ஹார்பர் குண்டுவெடிப்புக்குப் பிறகு அல்லது 9/11 பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்கா போர்நிறுத்தத்திற்கு உடன்படாதது போல, ஒக்டோபர் 7-ம் திகதி பயங்கரமான தாக்குதலுக்குப் பிறகு ஹமாசுடனான விரோதப் போக்கை நிறுத்த இஸ்ரேல் உடன்படாது. போர்நிறுத்தத்திற்கான அழைப்புகள் இஸ்ரேலை ஹமாசிடம் சரணடைய வேண்டும், பயங்கரவாதத்திடம் சரணடைய வேண்டும், காட்டுமிராண்டித்தனத்திற்கு சரணடைய வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் அது நடக்காது.

இஸ்ரேல் இந்த போரை தொடங்கவில்லை. இஸ்ரேல் இந்த போரை விரும்பவில்லை. ஆனால் இந்த போரில் இஸ்ரேல் வெற்றி பெறும் என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X