2025 பெப்ரவரி 09, ஞாயிற்றுக்கிழமை

மெக்சிகோவுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி வரியை தற்காலிகமாக நிறுத்திய அமெரிக்கா

Freelancer   / 2025 பெப்ரவரி 04 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெக்சிகோவுக்கு விதிக்கப்பட்ட 25 சதவீத இறக்குமதி வரியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக, அமெரிக்கா தெரிவித்துள்ளது.

 அமெரிக்க ஜனாதிபதியின் வரி விதிப்பு உத்தரவால் உலக அளவில் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. உலக அளவில் பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.

அதேவேளை, 25 சதவீத இறக்குமதி விதிக்கப்பட்டது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிடம் மெக்சிகோ ஜனாதிபதி குலொயா ஷியின்பனு தொலைபேசியில் தொடர்புகொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார்.

 இந்த பேச்சுவார்த்தியின் போது, மெக்சிகோவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைபவர்களை தடுக்கவும், மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்கவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என, ட்ரம்பிடம் குலொயா உறுதியளித்தார். மேலும், உடனடியாக மெக்சிகோவின் வடக்கு எல்லையில் அமெரிக்காவை ஒட்டிய பகுதிகளில் 10 ஆயிரம் தேசிய பாதுகாப்புப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர் எனவும் ஜனாதிபதி குலொயா உறுதியளித்தார்.

இதனை தொடர்ந்து, மெக்சிகோவுக்கு விதிக்கப்பட்ட 25 சதவீத இறக்குமதி வரியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும், இந்த உத்தரவு ஒரு மாதம் அமுலில் இருக்கும் என்றும், அமெரிக்கா தெரிவித்துள்ளது.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X