Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 10, செவ்வாய்க்கிழமை
Ilango Bharathy / 2023 மார்ச் 16 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இன்புளூயன்சா -ஏ (Influenza A )வைரசின் துணை வகையான இந்த வைரஸ்` H3N2`என அழைக்கப்படுகிறது.
இப்புதிய வகை வைரஸ் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோரைதான் அதிகம் தாக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, இக் காய்ச்சலால் இந்தியாவில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தமிழ்நாட்டிலும் இக்காய்ச்சலானது தீவிரமாகப் பரவி வருவதால் இக் காய்ச்சல் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு அமைச்சு வெளியிட்டுள்ளது.
அதன்படி,”மூச்சுவிடுவதில் சிரமம் இருந்தால் மட்டும் இன்புளூயன்சாவுக்கான ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் ப்ளூ காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டவர்கள் 7 நாட்கள் வரை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் காய்ச்சல் உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனைப்படி மருந்து எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தீவிர காய்ச்சல் உள்ள குழந்தைகள், கர்ப்பிணிகள், 65 வயதிற்கு மேற்பட்டோர், இணைநோய் இருப்போர் என 2 வகைகளில் இருப்பவர்களுக்கு இன்புளூயன்சாவுக்கான பரிசோதனையோ, மருத்துவமனை அனுமதியோ தேவையில்லை. இவர்கள் வீட்டுத்தனிமையில் இருந்தால் போதுமானது.
அதேவேளை சி வகை பாதிப்பான தீவிர காய்ச்சல், தொண்டை வழி, மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சு வலி, ரத்த அழுத்த குறைவு இருந்தால் மட்டும் இன்புளூயன்சா வைரசுக்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு தொடர் காய்ச்சல், உணவு உண்ணாமை, மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் இந்த ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
5 hours ago
09 Dec 2024