2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

மீண்டும் மீண்டுமா...? அதிர்ச்சியில் உலகநாடுகள்

Ilango Bharathy   / 2022 ஜனவரி 13 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த வருட இறுதியில்  வடகொரியாவில் கடும் உணவு பஞ்சம் ஏற்பட்டதைத் தொடர்ந்து  அந்நாட்டின் ஜனாதிபதி கிம் ஜாங் உன், தன்னுடைய புத்தாண்டு உரையில் 'இன்றைய பொருளாதார சூழலில் பொதுமக்களுக்கு உணவு தான் முக்கியமே தவிர அணு ஆயுதங்கள் அல்ல’ என்று தெரிவித்திருந்தார்.

எனினும்  2022-ஆம் ஆண்டு பிறந்ததில் இருந்து வடகொரியா  இரு ஏவுகணை சோதனைகளை  நடத்தியுள்ளதாக ஜப்பான் மற்றும் தென் கொரிய தெரிவித்துள்ளமை உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த ஏவுகணை சோதனைக்கு தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளதோடு அமெரிக்கா, பிரான்ஸ், அயர்லாந்து, பிரித்தானியா மற்றும் அல்பேனியா உள்ளிட்ட நாடுகள் ஏவுகணை சோதனையைத் தவிர்க்குமாறு  வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .