2025 மே 01, வியாழக்கிழமை

மனிதனைப் போல் பற்களை கொண்ட விசித்திர மீன்

Freelancer   / 2021 ஓகஸ்ட் 07 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள ஒரு மீனவருக்கு, பற்களுடன் கூடிய ஒரு அசாதாரண தோற்றமுடைய மீன் பிடிபட்டது.

இந்த மீனின் புகைப்படத்தை ஜென்னட்டி பியர் என்பவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். 

அந்த மீனின் பற்கள் மனிதர்களுக்கு இருப்பது போலவே அமைந்திருந்ததால் அதனைப் பார்த்து பலர் ஆச்சரியமடையத் தொடங்கினர்.

இது என்ன வகையான மீன் என பலரும் கேள்வியெழுப்பியதை தொடர்ந்து, இது ஷிப்ஹெட் எனப்படும் ஒருவகை மீன் என சிலர் விளக்கமளித்துள்ளனர். 

கடினமான இரையை நசுக்கி உண்ண ஷிப்ஷீட் மீன்களுக்கு இப்பற்கள் உதவுகிறதாம். இந்த மீன் தொடர்பான புகைப்படம் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .