2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

`மன்னர் சார்லஸின் காரை வழிமறித்த நபர்: காரணம் தெரிந்தால் அதிர்ச்சி அடைவீர்கள்

Ilango Bharathy   / 2022 செப்டெம்பர் 15 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னர் சார்லஸ்ஸின் காரை வழிமறித்து  நபரொருவர் புகைப்படம் எடுத்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின்  ராணியாக 70 ஆண்டுகளுக்கும் கூடுதலாக ஆட்சி செய்த ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 8 ஆம் திகதி உடல்நல குறைவால் சிகிச்சை பலனின்றி காலமானார்.
இதனால்  அவரது மகனான இளவரசர் சார்லஸ் மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில் மன்னர் சார்லஸ் மகாராணியாரின் இறுதி சடங்கு தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக லண்டனில் இருந்து ஸ்காட்லாந்துக்கு தனது பாதுகாவலர்கள் க காரில் சென்று கொண்டிருந்தார்.

 அப்போது திடீரென சாலையின் குறுக்கே வந்த ஒரு நபர் மன்னரின் காருக்கு முன்னால் சென்று காரை நிறுத்துங்கள் என்பது போல் கைகாட்டியுள்ளார்.

இதனால் அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் அந்நபர் மன்னரின் காரை ஒரு புகைப்படம் எடுத்துவிட்டு அமைதியாக அங்கிருந்து சென்றுள்ளார்.

இந்நிலையில் இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X