2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

மின் வெட்டிலிருந்து திரும்பத் திண்டாடும் ஸ்பெய்ன், போர்த்துக்கல்

Shanmugan Murugavel   / 2025 ஏப்ரல் 29 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


மின்வெட்டால் ஸ்பெய்ன், போர்த்துக்கல், பிரான்ஸில் மில்லியன் கணக்கானோர் மின்சாரமில்லாமல் திங்கட்கிழமை (28) பாதிக்கப்பட்டுள்ளனர்.  

பிரான்ஸ், ஸ்பெய்னுக்கிடையேயான மின்னிணைப்பின் பிரச்சினையொன்றாலேயே மின்வெட்டு ஏற்பட்டதாக ஐரோப்பாவின் வலு தொழிற்துறையைப் பிரதிநித்துவப்படுத்துகின்ற யூரோஎலெக்ட்ரிக்கின் தலைவர் கிறிஸ்டியன் ரூபி தெரிவித்துள்ளார்.  
இச்சம்பவத்தால் ஸ்பானிய மின்னிணைப்பானது பரவலான ஐரோப்பிய மின்னிணைப்பிலிருந்து துண்டிக்கப்பட்டதாக றூபி கூறியுள்ளார்.  
ரயில்கள் இரத்துச் செய்யப்பட்டதுடன், சில பிராந்தியங்களிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டதுடன், போக்குவரத்து சமிக்ஞைகள் இயங்க மறுத்திருந்தன.  
சிலர் மின் தூக்கிகளில் சிக்கியிருந்தனர்.  
திங்கள் இரவுடன் 50 சதவீதமானோருக்கு ஸ்பெய்னின் மின்சார விநியோகம் திரும்பியதாக அந்நாட்டுப் பிரதமர் பெட்ரோ சஞ்சேஸ் தெரிவித்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .