2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மருத்துவ கண்காணிப்பில் மகாராணி

Freelancer   / 2022 செப்டெம்பர் 08 , பி.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானிய மகாராணி, ஸ்கொட்லாந்தின் பால்மோரலில் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பிரித்தானிய மகாராணியின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கரிசனை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இன்று காலை, மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையை அடுத்து, அவர் மருத்துவ மேற்பார்வையில் இருக்க வேண்டும் எனவும்  மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

96 வயதான பிரித்தானிய மகாராணி கடந்த புதன்கிழமை ஒரு மெய்நிகர் ஆலோசனையில் கலந்துக்கொண்டதையடுத்து, அவரை ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில்  இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X