2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மற்றுமொரு பழங்குடியினம் அழிந்தது; கடைசி மனிதனின் சடலம் மீட்பு

Ilango Bharathy   / 2022 ஓகஸ்ட் 31 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரேசில் அருகே உள்ள அமேசான் காட்டுப்பகுதியில் வாழ்ந்து வந்த பழங்குடியின மக்களின் கடைசி மனிதர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார்.

 
1970 இல் இருந்து 1995க்குள் நில அபகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் அமேசான் காட்டில் வாழ்ந்துவந்த பழங்குடியின மக்கள் பலர் கொல்லப்பட்ட நிலையில், குறித்த நபர் சுமார் 26 வருடங்களாக தனியாக அக் காட்டில் வசித்து வந்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.
 
இந்நிலையில் 1996 ஆம் ஆண்டு FUNAI (Fundação Nacional do Índio)அமைப்பிற்கு இவர் உயிருடன் இருப்பதும் தனியாக அந்தக் காட்டில் வசித்து வருவதும் தெரிய வந்துள்ளது.  எனினும் அவருடன் எந்த ஒரு தொடர்பும் வைத்துக் கொள்ள முடியாதபடி மறைந்து வாழ்ந்து வந்துள்ளார்.

 இந்நிலையில் கடந்த 23ஆம் திகதி அவரது குடிசைக்கு வெளியே சடலமாகக் கிடந்துள்ளார்.

சுமார் 60 வயது மதிக்கத்தக்க அவரது இறப்பிற்கு எந்த ஒரு தாக்குதலும் காரணம் இல்லை என்றும் இயற்கையாகவே அவர் உயிரிழந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அவரது உயிரிழப்பானது மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X