2024 ஜூலை 27, சனிக்கிழமை

மூழ்கும் நிலையில் நியூயோர்க்

Ilango Bharathy   / 2023 மே 25 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வானுயர்ந்த கட்டிடங்களின் அழுத்தம் காரணமாக, அமெரிக்காவின் நியூயோர்க் நகரம் மூழ்கி வருவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

எர்த் 'ஸ் ஃப்யூச்சர் என்ற இதழில் இதுகுறித்த ஆய்வு தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. நியூயோர்க் நகரில் உள்ள ஐந்து முக்கிய பகுதிகளில் சராசரியாக 10 லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்கள் உள்ளன.

அவை, தோராயமாக 1.7 ட்ரில்லியன் பவுண்டுகள் எடையிலான அழுத்தத்தை பூமிக்கு கொடுக்கின்றன. இவற்றின் காரணமாக ஆண்டு ஒன்றுக்கு 1 முதல் 2 மில்லிமீற்றர் அளவு நியூயோர்க் நகரம் மூழ்கிவருவதாகக் கூறப்படுகிறது.

செயற்கைக்கோள் தரவுகள் மூலம் இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கப்பட்டு உள்ளன.

புவி வெப்பமயமாதல் காரணமாக கடல் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால், நியூயோர்க் நகரத்திற்கு வெள்ள அபாயம் அதிகரித்துள்ளதாகவும் இவ் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .