Freelancer / 2025 டிசெம்பர் 25 , மு.ப. 09:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் பொலிஸ் அதிகாரி இருவர் உள்ளிட்ட 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ரஷ்யாவின் மொஸ்கோ தெற்குப்பகுதியில் யெலெட்ஸ்கயா என்ற தெருவில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரிடம், அவ்வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையின் போது திடீரென் பலத்த சத்தத்துடன் குண்டுவெடித்ததோடு, இந்த சம்பவத்தில் இரு பொலிஸ் அதிகாரிகளும் பலத்த காயமடைந்து பின்னர் உயிரிழந்தனர். அங்கிருந்த ஒருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தையடுத்து பொலிஸ் அதிகாரிகளைக் கொலை செய்ய முயன்றமை மற்றும் சட்டவிரோத வெடிபொருள்கள் கடத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் ரஷ்யாவின் புலனாய்வுக் குழு வழக்குப் பதிவு செய்துள்ளது. (a)

23 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
3 hours ago
4 hours ago