2025 மே 14, புதன்கிழமை

மாணவர்கள் பாடசாலையில் உறங்க கட்டணம்

Freelancer   / 2023 செப்டெம்பர் 11 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவில் உள்ள தனியார் தொடக்கப்பாடசாலை ஒன்றில், மதிய உணவு இடைவேளையின் போது தலையணை அல்லது மேட் வைத்து தூங்கும் மாணவர்களுக்கு கட்டணம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்திருக்கும் WeChat தகவல் தொடர்பு குரூப்பில் இந்த கட்டண வசூல் முடிவு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது

பாடசாலை நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், “மேசையின் மீது படுத்து உறங்கும் மாணவர்களிடம் 200 யுவான் (ரூ. 8,885.34) கட்டணமாக வசூல் செய்யப்படும். மேட் விரித்து உறங்கும் மாணவர்கள் 360 யுவான் (ரூ. 15,993.61) கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். பாடசாலை வளாகத்தில் உள்ள ஓய்வறைகளில் மெத்தையில் உறங்க விரும்பும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக 680 யுவான் (ரூ. 30,210.15) கட்டணம் விதிக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாடசாலை ஆசிரியர் ஒருவர் பேசுகையில், “விதிமுறைகளின் அடிப்படையில் தான் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற கட்டணம் வசூல் செய்வதற்கு தனியார் பாடசாலைகளுக்கு அதிகாரம் உள்ளது” என்று கூறினார். மாணவர்கள் தூங்கும் போது அவர்களை பத்திரமாக பார்த்துக் கொள்ள ஆசிரியர்களை தனியாக நியமிக்க வேண்டி இருக்கிறது என்பதால் இந்த கட்டணம் வசூல் செய்யப்படுகிறது என்று பாடசாலை நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .