Freelancer / 2025 செப்டெம்பர் 14 , மு.ப. 08:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
மியான்மாரில் இரு பாடசாலைகள் மீது இராணுவம் குண்டு வீச்சு நடத்தியதில் 19 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கியாக்தவ் டவுன்ஷிப் பகுதியில் உள்ள இரு தனியார் பாடசாலைகள் மீதே இவ்வாறு குண்டு வீச்சு இடம்பெற்றுள்ளது.
மியான்மாரில் அரசுக்கு எதிராக சின் மற்றும் ராக்கைன் ஆகிய மாநிலங்களில் அராகன் கிளர்ச்சிப் படை செயல்பட்டு வருகின்றது.
இந்த படை, தனிநாடு கோரி பல ஆண்டுகளாக அரச இராணுவத்துடன் போர் நடத்தி வருகின்றது.
இந்தநிலையில், அராகன் இராணுவத்தினருக்கும் மற்றும் மியான்மர் அரச இராணுவத்தினருக்கும் இடையே நேற்று முன்தினம் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, பாடசாலைகள் மீது சுமார் 227 கிலோ வெடிமருந்துகளைக் கொண்ட வெடிகுண்டுகளை வீசி அந்நாட்டு இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதில், 19 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் பலியானவர்களுக்கு 15 முதல் 21 வயது இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .