Editorial / 2019 ஒக்டோபர் 14 , பி.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஈக்குவடோர் தலைநகர் குயிட்டோவை முடக்கிய பாரிய ஆர்ப்பாட்டங்களை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் ஆர்ப்பாட்டக்காரத் தலைவர்களுடனான இணக்கமொன்றில் மீண்டும் எரிபொருள் கழிவுகளை வழங்குவதற்கு ஈக்குவடோர் அரசாங்கம் இணங்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள், றோமன் கத்தோலிக்கத் தேவாலயத்தால் ஏற்படுத்தப்பட்ட பேச்சுக்களில் ஈக்குவடோர் அரசாங்கமும், ஆர்ப்பாட்டக்காரத் தலைவர்களும் ஈடுபட்ட நிலையிலேயே மேற்குறித்த இணக்கம் வந்துள்ளது.
ஏறத்தாழ இரண்டு வாரங்களாக வன்முறை ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதைத் தொடர்ந்தே அரச தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட குறித்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருந்தன.
இராணுவத்தால் அமுல்படுத்தப்படும் ஊரடங்கொன்றை ஈக்குவடோர் ஜனாதிபதி லெனின் மொரெனோ கடந்த சனிக்கிழமை பிறப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அயல் நாடுகளுக்கு எரிபொருளைக் கடத்துபவர்களால் எரிபொருள் கழிவுகள் பயன்படுத்தப்படாததை உறுதி செய்யும் விதமான புதிய சட்டமொன்று தொடர்பில் ஈக்குவடோர் அரசாங்கமும், ஆர்ப்பாட்டக்காரத் தலைவர்களும் இனிக் கலந்துரையாடவுள்ளனர்.
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago