2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மீண்டும் ஒரு தூக்குத் தண்டனை

Ilango Bharathy   / 2022 டிசெம்பர் 14 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஈரானில் அண்மையில் ஹிஜாப்பினை முறையாக  அணியவில்லை எனக்  கூறி கைது செய்யப்பட்ட ‘மஹ்சா அமினி‘ என்ற இளம்பெண் பொலிஸார் தாக்கியதில் உயிரிழந்தார்.

 இச்சம்பவமானது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர்  தொடர்  போராட்டங்களில்  ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் கடந்த 2 மாதங்களாக நடைபெற்ற போராட்டத்தில் போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் தாக்கியதில் இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அதே சமயம் போராட்டத்தில் ஈடுபடுவர்களுக்கு ஈரான் அரசு  தூக்குத் தண்டனையும் விதித்து வருகின்றது,  

அந்தவகையில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் பாதுகாப்பு படை வீரரை கத்தியால் குத்தியதாக மொஷென் ஷெகாரி என்ற நபருக்கு ஈரான் அரசு அண்மையில் தூக்கு தண்டனை நிறைவேற்றியது.

இந்நிலையில், மஜித்ரிசா ரஹ்நவர்டு என்ற நபருக்கும் நேற்றைய தினம் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

போராட்டத்தின் போது 2 ஈரான் பாதுகாப்பு படை வீரர்களை, மஜித்ரிசா ரஹ்நவர்டுகொன்றதாக குற்றம் சுமத்தப்பட்ட நிலையிலேயே அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X