2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மீண்டும் ஜனாதிபதியானார் ‘லுலு டா சில்வா‘

Ilango Bharathy   / 2022 நவம்பர் 01 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் 4-ஆவது மிகப் பெரிய ஜனநாயக நாடான பிரேஸிலில் கடந்த 2 ஆம் திகதி ஜனாதிபதித் தோ்தல் நடைபெற்றது.

இத்தேர்தலில் 11 பேர் போட்டியிட்ட போதும், வலதுசாரி தலைவரான ஜனாதிபதி ஜெயீர் பொல்சொனாரோவுக்கும்,   இடதுசாரி தொழிலாளா் கட்சித் தலைவரான முன்னாள் ஜனாதிபதி லூலா டி சில்வாவுக்கும் கடுமையான போட்டி நிலவி வந்தது.

இதில், லூலா டி சில்வா 47.9 சதவீத வாக்குகளும், பொல்சொனாரோ 43.6 சதவீத வாக்குகளும் பெற்றனா்.

 பிரேஸில் அரசமைப்புச் சட்டப்படி ஜனாதிபதித் தோ்தலில் வெற்றி பெறுவதற்கு 50 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும் என்பதால்  முதல் இரு இடங்களைப் பெற்ற இருவருக்கும் கடந்த 30 ஆம் திகதி தேர்தல் நடைபெற்றது.

அந்தவகையில் நேற்று முன்தினம் வெளியான தேர்தல் முடிவுகளின் படி,  லூலா 50.8 சதவிகித வாக்குகளும், பொல்சொனாரோ 49.2 சதவிகித வாக்குகளும் பெற்றதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், மீண்டும் லூலா டி சில்வா பிரேசிலின்   ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்ளிட்ட பல  உலகத்  தலைவர்கள் லூலா டி சில்வாவுக்கு  வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X