Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mayu / 2024 ஜனவரி 16 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலஞ்சம் பெற்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்த, வியட்நாமின் முன்னாள் சுகாதார அமைச்சர் Nguyen Thanh Long -க்கு 18 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வியட்நாமின் முன்னாள் சுகாதார அமைச்சர் கொரோனா பரிசோதனை தொகுதிகளை ( test kit) கொள்வனவு செய்த ஒப்பந்தத்தில் 2.25 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பரிசோதனை தொகுதிகள் சந்தை விலையை விட அதிக விலைக்கு தனியார் மருத்துவ விநியோக நிறுவனத்திடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளமை நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது.
பெருந்தொற்று காலகட்டத்தின் போது, குறித்த நிறுவனம் 4.5 மில்லியன் கொரோனா பரிசோதனை தொகுதிகளை, அவற்றின் உண்மையான சந்தை விலையை விட மூன்று மடங்கு அதிக விலையில் விற்பனை செய்துள்ளதோடு, இந்த கொடுக்கல் வாங்கல் மூலமாக, 50.25 மில்லியன் அமெரிக்க டொலரை சட்டவிரோத வருமானமாக ஈட்டியுள்ளது.
ஒரு வாரத்திற்கும் மேலாக நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்ட முன்னாள் சுகாதார அமைச்சர் Nguyen Thanh Long, அதற்காக மன்னிப்புக் கோரியுள்ளார்.
இதேவேளை, இந்த ஊழல் மிக்க கொடுக்கல் வாங்கல் தொடர்பில் முன்னாள் அமைச்சருக்கு 18 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதோடு, மருந்து விநியோக நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரிக்கும் 29 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .