Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 10, சனிக்கிழமை
Freelancer / 2025 மே 04 , பி.ப. 01:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு துனிசியாவின் முன்னாள் பிரதமருக்கு, 34 ஆண்டு காலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு துனிசியாவின் பிரதமராக 2013 முதல் 2014 வரை பதவி வகித்தவர் அலி லராயோத். இவர் பயங்கரவாதத்திற்கு ஆதரவாக செயற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக 2022ஆம் ஆண்டு அலி லராயோத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சிரியாவில் போரிடம் துனிசியாவில் இருந்து ஆயுதக்குழுவினரை அனுப்பி வைத்ததாக அலி லராயோத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் அலி லராயோத் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்து, 34 ஆண்டு காலம் சிறை தண்டனை விதித்துள்ளது.
அதேவேளை, எதிர்க்கட்சியின் குரலை நசுக்கவே அலி லராயோத் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாகவும், தற்போதைய அதிபர் கயிஸ் சையது எதிர்க்கடைகளை ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
09 May 2025