2025 மே 15, வியாழக்கிழமை

முன்பள்ளியில் கத்திக்குத்து; 6 பேர் உயிரிழப்பு

J.A. George   / 2023 ஜூலை 10 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள முன்பள்ளியில் இன்று (10) காலை இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலில்  6 பேர் கொல்லப்பட்டனர்.

அத்துடன், ஒருவர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

25 வயது இளைஞனே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக  அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.

லியான்ஜியாங் மாவட்டத்தில் நடந்த இந்த தாக்குதலின்  லியான்ஜியாங்கைச் சேர்ந்த சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அவரிடம் விசாரணை நடத்தி வருவதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .