2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

மூன்றாவது பதவிக்காலம்: நகைச்சுவை அல்ல; ட்ரம்ப்

Shanmugan Murugavel   / 2025 மார்ச் 31 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


மூன்றாவது பதவிக்காலமொன்றை எதிர்பார்ப்பது குறித்து நகைச்சுவைக்காகத் தெரிவிக்கவில்லையென ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை (30) தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அமெரிக்காவின் அரசியலமைப்பின்படி மூன்றாவது பதவிக்காலம் இல்லையென்பது குறிப்பிடத்தக்கது.

அரசியலமைப்பு திருத்தத்துக்கான முன்மொழிவானது காங்கிரஸின் இரண்டு சபைகளிலும் மூன்றிலிரண்டு பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட வேண்டுமென்பதுடன், 50 ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் நான்கில் மூன்றால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

இரண்டாம் உலகப்போரின்போது பிராங்லின் டி. ரூஸ்வெல்ட் 1940ஆம் ஆண்டு மூன்றாவது பதவிக்காலத்தில் பதவி வகித்ததுடன், 1945ஆம் ஆண்டு நான்காவது பதவிக்காலத்தில் இறந்திருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X