2025 மே 14, புதன்கிழமை

மூன்று நாடுகளுக்கு அழைப்பு இல்லை

Editorial   / 2023 செப்டெம்பர் 04 , பி.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இந்த ஆண்டுக்கான நோபல்பரிசு வழங்கும் விழாவில் பங்கேற்க ரஷ்யா, பெலாரஸ், ஈரான் ஆகிய நாடுகளுக்கும் அறக்கட்டளை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்கு சுவீடனை சேர்ந்த பல எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து நோபல் பரிசு வழங்கும் விழாவை புறக்கணிப்பதாக தெரிவித்தனர்.

 உக்ரேன் மீதான போர் மற்றும் சுவீடன் நேட்டோ அமைப்பில் இணைய ரஷ்யா எதிர்ப்பது ஆகியவை காரணமாக அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கடும் எதிர்ப்பு காரணமாக நோபல்பரிசு வழங்கும் விழாவில் பங்கேற்க ரஷ்யா-பெலாரஸ் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு விடுத்த அழைப்பை நோபல் அறக்கட்டளை திரும்ப பெற்றுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .